Book Chapter Publishing / ஆய்வு அத்தியாயம் சமர்ப்பித்தல்
ஆய்வுக்கட்டுரை தமிழ் /ஆங்கிலம் ஆகிய மொழிகளில் அமையலாம்.
ஆய்வுக்கட்டுரை ஏ4 தாளில் 12 அளவு, 1.5 இடைவெளியுடன் ஏரியல் யுனிகோடு (தமிழ்), டைம்ஸ் நியூரோமன் (ஆங்கிலம்) எழுத்துருவில் தட்டச்சு செய்து இருக்க வேண்டும்.
ஆய்வுகள் நன்னோக்கத்துடன், ஆக்கப்பூர்வமாக அமைய வேண்டும். அதன் மூலமாக ஆய்வு மேலும் உலகளாவிய ஆய்வாக உலகம் முழுமையும் கொண்டு செல்ல நமது ஆய்வுகள் முன்னோடியாக அமையும்படி இருக்க வேண்டும்.
ஆய்வுக்கட்டுரைகள் ஆராய்ச்சி நெறிமுறைகள், உலக தமிழாராய்ச்சி நிறுவனம்) (தமிழ்) மற்றும் ஆங்கிலத்தில் எம்எல்எ 8 முறைப்படி இருக்க வேண்டும் இல்லையேல் நிராகரிக்கப்படும்.
புத்தக அத்தியாயத்திற்கு எழுத ஆய்வுத் தலைப்புகளை நித்திலம் பப்ளிகேஷன்ஸ் அந்ததந்த இதழில்களில் வெளியிடும்.
ஆய்வுக் கட்டுரைத்தலைப்பு (Topic), ஆய்வுச் சுருக்கம் (Abstract), திறவுச் சொற்கள் (Key words) ஆங்கிலத்திலும் தமிழிலும் கண்டிப்பாக இருக்க வேண்டும்.
பெயர், பணியிட முகவரி, மின்னஞ்சல் முகவரி மற்றும் அலைபேசி எண் (புலன எண்) கண்டிப்பாக ஆய்வுக் கட்டுரையில் இருக்க வேண்டும். ஆய்வு மாணவர்கள் அவரவர் ஆய்வுத் தலைப்புகளில் நெறியாளரின் அனுமதிப் பெற்று ஆய்வுக்கட்டுரை அனுப்ப வேண்டும். நெறியாளரின் பெயர், பணியிட முகவரியும் இணைக்க வேண்டும்.
கருத்துத் திருட்டை ஓர் அறிஞரின் கருத்திற்கு செய்யும் அநீதியாகவே இவ்விதழ் கருதுகிறது. ஆய்வுக்கட்டுரை ஆய்வு நோக்கம் கொண்டு கருத்துத்திருட்டு இல்லாமல் அமைந்தால் மட்டுமே மதிப்பீட்டு நிலைக்குத் தேர்வு செய்யப்பெறும். கட்டுரை வெளியிடப்பட்ட பிறகு ஏதேனும் அறிவுசார் திருட்டு அல்லது எந்த வகையான கையாளுதலுடன் கண்டறியப்பட்டால், கட்டுரை திரும்பப் பெறப்படும். கட்டுரை ஆசிரியர் முழுப் பொறுப்பையும் ஏற்க வேண்டும் மற்றும் வெளியீட்டாளரால் விசாரணை மேற்கொள்ளப்படும்.
கண்டிப்பாக ஆசிரியர்கள் தங்களுக்குரிய ORCID (https://orcid.org/) எண்ணை வழங்குதல் வேண்டும்.
ஆய்வாளர்கள் தங்கள் பயன்படுத்தும் நூல்கள், ஆய்விதழ்கள், ஆய்வுக் கட்டுரைகள், ஆய்வேடுகள் மற்றும் இணையதள தரவுகள் (அவசியமெனில் ஒன்றோ இரண்டோ இணைக்கலாம்) போன்ற குறிப்புகளை தேவையான மேற்கோளிட்டுக் குறிப்புப்பட்டியலில் இடம் பெற்றிருக்கிறதா என உறுதிச் செய்து கொள்ள வேண்டும்.
மேற்கோளிட்ட தரவுகள் மட்டும் துணைநூல் பட்டியலில் அமைய வேண்டும். அவை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தமிழ் அகரவரிசையில் கண்டிப்பாக இடம் பெற்றிருக்க வேண்டும்.
ஆய்வுக் கட்டுரைகள் சக மதிப்பாய்வு செயல்முறை உட்படுத்தப்படுகிறது.
புத்தக ஆய்வு அத்தியாயம் ISBN OR ISSN உடன் pdf வடிவத்தில் இணையதளத்தில் பதிவு செய்யப்படும். சக மதிப்பாய்வு செயல்முறை வெளியீட்டுச் சான்றிதழ் ஒவ்வொரு ஆசிரியருக்கும் வழங்கப்படும். தனித்தனி DOI ஒவ்வொரு புத்தகத்திற்கும் ஒதுக்கப்படும்.
நித்திலம் பப்ளிகேஷன்ஸ் இதழாக ஜனவரி, மார்ச், மே, ஜுலை, செப்டம்பர், நவம்பர் ஆகிய மாதங்கள் வெளிவரும்.
ஆய்வுக் கட்டுரை 10 முதல் 30 பக்கம் வரை அனுமதிக்கபடுகிறது.
ஒவ்வொரு ஆசிரியருக்கும் வெளியீட்டுச் சான்றிதழ் வழங்கப்படும். ஒவ்வொரு புத்தகத்திற்கும் தனித்தனியான DOI எண் ஒதுக்கப்படும்.
இந்திய எழுத்தாளர்களுக்கு ரூ 1000 மற்றும் வெளிநாட்டினருக்கு US $ 50, இலங்கை US $ 30 ஆகும். இந்தக் கட்டணம் மின்னிதழ் பணிகளுக்காகப் பெறப்படுகிறது. வியாபார நோக்கத்திற்காக அல்ல.
நித்திலம் பப்ளிகேஷனில் பதிவிடத் தேர்ந்தெடுத்த கட்டுரைகளுக்கு மட்டுமே கட்டணம் பெற்றுக் கொள்ளப்படும். நீங்கள் கட்டுரை அனுப்பிய ஒரு வாரத்திற்குள் உங்களது கட்டுரை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதா என்பது பற்றிய விபரம் உங்களுக்கு தெரிவிக்கப்படும்.
தமிழ்த்துறை மற்றும் பிறத்துறைப் பேராசிரியர்கள், துறை வல்லுநர்கள் கட்டுரைகள் வழங்கலாம். ஆய்வுக்கட்டுரையைக் கணினிவழி தட்டச்சு செய்து niththilambookchapter@gmail.com மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புதல் வேண்டும்.
நமது நித்திலம் பப்ளிகேஷன்ஸ் இணையதளத்தில் submit your book chapter என்ற பகுதியிலும் பதிவேற்றம் செய்யலாம்.
ஆய்வுக் கட்டுரைகளில் சொல்லப்படும் கருத்துகளுக்கு ஆய்வுக் கட்டுரை ஆசிரியர்களே பொறுப்பாவர்.
நித்திலம் புத்தக ஆத்தியாயத்தில் வெளியிடப்பட்ட கட்டுரையின் பதிப்புரிமை கட்டுரையாளருக்கே உரியது.
திறந்தநிலை அணுகல் முறைப்படி நித்திலம் இதழ் வாசகர்கள் கட்டுரைகளை நேர்மையான முறையில் தேடவும், வாசிக்கவும், தரவிரக்கம் செய்யவும், நகல் எடுக்கவும், மற்றும் இணைப்பு எடுக்கவும் அனுமதிக்கப்படுகிறது.
நித்திலம் பப்ளிகேஷன்ஸ் இதழின் நெறிமுறைகளைப் பின்பற்றாத கட்டுரைகள் நிராகரிக்கப்படும்.
பதிப்புரிமை : ஆசிரியர்கள்' நித்திலம் ஒரு திறந்த அணுகல் இதழ் மற்றும் Pdf நகலை CC BY உரிமத்தின் விதிமுறைகளுக்குள் மீண்டும் பயன்படுத்தலாம்.